Wednesday, November 03, 2004

புலவரே தெரியுமா??

Was thinking about what to write and all of a sudden remembered this favourite puzzle of mine[When I was in school, I would have asked this to each and every person I came across.. :)]My 8th Std class teacher told us this,as we were all eagerly awaiting for the last assembly of that academic year before we started for the summer vacation.

ஒரு ஊர்ல இரண்டு புலவர் இருந்தாங்களாம்.(இரண்டே புலவர் தானா ? - அப்படினு எல்லாம் கேள்வி கேக்க கூடாது. எங்க miss சொன்ன மாதிரியே நானும் சொல்றேன்.)

ஒருத்தருக்கு இன்னொருத்தரோட கால வாரி விடறதுனா ரொம்ப பிடிக்குமாம்..
ஒரு நாள் புலவர் No.1 , புலவர் No.2 கிட்ட போய்

முக்காலை கையில் எடுத்து
மூவிரண்டு போகையிலே
இக்காலில் ஐந்து தலை நாகம் ஒன்று
அழுந்தக் கடித்ததுவே ! - அப்படினு சொல்லிட்டு,இதுக்கு ஏதாவது வைத்தியம் சீக்கிரமா சொல்லுங்க-னு சொன்னாராம்.

அதுக்கு புலவர் No.2 சளைக்காம,

பத்து ரதன் புத்திரனின்
மித்திரனின் சத்ருவின்
பத்தினியின் கால் வாங்கி தேய் ! -அப்படினு சொல்றாராம்..

இரண்டு புலவரும் என்ன பேசிக்கிட்டாங்கனு அவங்களுக்கு புரிஞ்சிருச்சு..
உங்களுக்கு புரிஞ்சுதா?
உங்களுக்கு புரிஞ்சா எனக்கும் சொல்லுங்க.. :)